இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 4
இந்திய அரசியலமைப்புக்கு என்று தனி சிறப்பம்சம் உள்ளது. பல நாடுகளின் அரசியலமைப்புகளை தழுவி எழுதப்பட்டதே இந்திய அரசியலமைப்பு , ஏதோ நகல் எடுத்தது போல் அல்லாமல் இந்த இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தி போகின்ற வழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு பல சட்ட திருத்தங்களை சந்தித்தாலும் இன்றளவும் , இந்த மாற்றங்கள் அடைந்த சமூகத்திற்கு ஏற்ப இருக்கிறது. இதற்கு காரணம் இந்திய அரசியலமைப்பின் " அடிப்படை கட்டமைப்பு" . இந்த அடிப்படை கட்டமைப்பு மாறாமல் இருப்பதால் தான் இன்றளவும் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அடிப்படை கட்டமைப்பு என்பது என்வென்று இனி வரும் காலங்களில் பார்ப்போம் , இந்த தொடர் முடியும் பொழுது கண்டிப்பாக உங்களுக்கு அது தானாகவே புரிந்துவிடும். நிறைவான நிறைகள் என்னை பொறுத்தவரை இந்த அண்டத்தில் புனிதம் என்ற ஒன்றோ அல்லது முழுவதுமாக நல்லவை என்ற ஒன்றோ கிடையாது. எல்லா உயிர்களிடத்தும் சரி , எல்லா பொருளிலும் சரி நல்லது கெட்டது , பயனுள்ளது பயனற்றது என்று குணங்கள் உண்டு , இவற்றின் வீகிதம் தான் அந்த பொர...