Posts

Showing posts with the label chemistry

நம்மால் ஏன் எலெக்ட்ரானை பார்க்க முடியாது ?

Image
மி க அதிகமாக யோசிக்கும் பழக்கம் எனக்கு உள்ளது, டாக்டர் ஸ்ட்ரேஞ் உடன் போட்டிபோடும் அளவுக்கு ஒரே பிரச்சினைக்கு பல்வேறு முடிவுகளை கற்பனை செய்து பார்க்கும் பழக்கம் உண்டு. அப்படி கடந்த வாரம் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஏன் இவ்வளவு தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டும் நம்மால் எலெக்ட்ரானையோ அல்லது புரோட்டானையோ பார்க்க முடியவில்லை ? என்ற எண்ணம் தோன்றிவிட்டது. தூங்க போகும் போது தான் இந்த எண்ணம்  வர வேண்டுமா என்று கடுப்பாகி யோசிக்க ஆரம்பித்தேன், இருக்கவே இருக்கிறார் நம் அண்ணண் chatgpt, அண்ணனையும் அர்த்த ராத்திரியில் எழுப்பி கேள்வியை தட்டி விட்டேன், chatgpt அண்ணணோ Heisenberg uncertainty principle என்ற இடத்தில் வந்து நின்றார். Heisenberg uncertainty principle என்றால் என்ன என்பதை பார்பதற்கு முன்பு சில அடிப்படைகளை தெரிந்து கொள்வோம். இல்லையென்றால் இந்த கட்டுரையே புரியாமல் போகலாம்...... ஃபோட்டான் மகிமை நாம் எப்படி பார்க்கிறோம் என்று கேட்டால் "கண்ணால்" என்று மொக்கை ஜோக்ஸ் அடிப்பவர்கள் தான் நிறைய பேர். ஆனால் உண்மையில் நாம் எப்படி பார்க்கிறோம் என்ற அறிவியலை யாரும் புரிந்துக் கொள்ள முற்படுவதில்...