இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 3
இந்திய அரசியல் நிர்ணய சபைக்கான குரலானது M.N. ராயிடம் இருந்து தொடங்கியது. இந்தியாவை இந்திய மக்கள் தான் ஆள வேண்டும் , அதற்காக தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசாங்கம் வேண்டும் என்ற கோரிக்கை படிப்படியாக வளர்ந்து , 1938 ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் நேரு " இந்தியாவை இந்தியர்கள் ஆள ஒரு அரசியலமைப்பு தேவை" என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஆங்கிலேய அரசுக்கு தெரியப்படுத்தினார். இந்த கோரிக்கை 1940 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது , இதை "ஆகஸ்ட் சலுகை" என்பார்கள். இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்க "கிரிப்ஸ் திட்டம்" வந்தது. தனிநாடு மற்றும் தனி அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் லீகால் முன்வைக்கப்பட்டது , இதனால் கிரிப்ஸ் திட்டத்தை நிராகரித்தார்கள். முஸ்லிம் லீக்கின் சில கோரிக்கைகளை நிறைவேற்றி "கேபினட் திட்டம்" உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கியது. இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்கள் மறைமுக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எ...