Posts

சரியான நேரம்

Image
சரியான நேரம்       அந்த பீரியட் முடிந்து ஸ்டாஃப் ரூமில் வந்து அமர்ந்தாள் மீரா. முகம் வாடிப் போயிருந்தது, வெயில் ஒரு பக்கம், இந்த பசங்களுக்கு பாடம் எடுக்குறது ஒரு பக்கம். அங்கிருந்த மேசை மீது தலை சாய்த்து படுத்துவிட்டாள். ஸ்டாஃப் ரூமில் இருந்தவர்கள் அவர் அவர்கள் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தனர், வகுப்புகள் முடிந்தவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தனர். "என்ன மீரா தூங்கிட்டு இருக்க" என்று சீண்டினாள், பாக்கியம் மேடம். பாக்கியம் என்பது அவருடைய பெயர், அறிவியல் ஆசிரியை, மற்றும் கொஞ்சம் சீனியர் என்பதால் "மேடம்" பெயரோடு ஒட்டிக் கொண்டது. "சின்ன புள்ளைங்க நல்ல பிரிஸ்கா இருக்க வேணாமா ?" என்று மறுபடியும் சீண்டினாள். காரணம், விளக்கம் எல்லாம் சொல்லி அவர்களிடம் தன் நிலையை சொல்ல அவளுக்கு தோன்றவில்லை விருப்பமும் இல்லை, "ஆமாம் நான் லூசு தான்" என்று வடிவேலு பாணியில் பேச்சை முடிப்பதற்காக "ஒடம்பு சரியில்லை மேடம்" என்று சொல்லி  மறுபடியும் படுத்துக்கொண்டாள். இதற்கு மேல் எதுவும் பேசாமல் பாக்கியம் மேடம் அவர் இருக்கைக்கு சென்றுவிட்டாள். மீராவிற்கு இது தான் முதல் வேலை...

காகித அன்பு

Image
அ ந்த பிரபலம் இல்லாத பத்திரிகையில் “பேனா பக்கிரி” என்ற அடைமொழியில் எழுதிக்கொண்டு இருந்தான் மாறன். சில ஆயிரங்களில் தான் சம்பளம் என்றாலும், ஏனோ அந்த எழுத்துக்கள் அவனுக்கு ஒரு நிறைவை கொடுத்துக்கொண்டு இருந்தன. பேனா பக்கிரி எழுதிய 70% சதவீத கதைகள் நல்ல கதைகள் ரகம் தான். இவன் கதைகளால் பத்திரிகை விற்கிறதா? அல்லது பத்திரிகை விற்பதால் இவனுக்கு கதை எழுத வாய்ப்பு வருகிறதா என்பது புரியாத புதிர். “வாசகர்கள் குறைந்துகொண்டே இருக்கிறார்கள்” என்று பத்திரிகையின் ஆசிரியர் சொன்னது ஞாபகம் வந்தது. ரீல்ஸ், ஷார்ட்ஸ், டிக் டாக் என்று இன்று வேகமாக தகவல்களை மூளைக்குள் திணித்துக்கொண்டு ஒடும், இன்றைய தலைமுறைக்கு கொஞ்சமும் ஒட்டாத நிலையில் இருந்தான் மாறன். கதைகளை ஏதோ என்று எழுதுவதோ அல்லது “இன்ஸ்பிரேஷன்” என்றுக் கூறிக்கொண்டு ஒரே விஷயத்தை வேறு ஒன்றாக உருட்டி தருவதோ, அவனிடம் கிடையாது. அத்தனையும் சொந்த சரக்கு. ஆர்வமும் திறமையும் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இயங்கும் பல லட்சம் இளைஞர்களை போலத்தான் மாறனும், "என்றாவது ஒரு நாள் தன் வாழ்க்கை மாறும், அதுவரை ஓடுவோம்" என்ற நம்பிக்கையில் ஒடிக்கொண்டு இருப்பவன்...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 9

Image
9     கொஞ்சம் பெரிய இடைவெளியாகிவிட்டது, வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். இந்த பகுதியில் அடிப்படை உரிமைகளை பற்றி பார்க்கப்போகிறோம். "அடிப்படை உரிமைகள்" என்றால் நமக்கு மட்டும் அடிப்படையானவை அல்ல நம் அரசியலமைப்பின் அடிநாதமே இதன் மீது தான் கட்டியெழுப்பட்டுள்ளது. இதன் மீது தொடுக்கப்படும் தாக்குதல்  அல்லது அடிப்படை உரிமைகள் மீறப்படுவது என்பது மக்களாட்சி தத்துவத்தையும் இந்திய அரசியலமைப்பையும் சிதைக்கும் முயற்சிகவே பார்க்க முடியும்.       அரசியலமைப்பு சட்டப்பிரிவு 12 முதல் 35 வரை அடிப்படை உரிமைகள் பற்றி விவரிக்கின்றன. அரசியலமைப்பு உருவான போது ஏழு அடிப்படை உரிமைகள் இருந்தன, அவை பின்வருமாறு, சம உரிமை  சுதந்திரத்திற்கான உரிமை  சுரண்டலை தடுப்பதற்கான உரிமை  சமயச் சுதந்திர உரிமை  பண்பாடு, கல்வி பற்றிய உரிமைகள் குறித்த சில சட்டங்களுக்கான பாதுகாப்பு உரிமை  சட்டத்தீர்வுகளுக்கான உரிமை  விதவிதமாய் வித்தியாசமாய்    என்னதான் அரசியலமைப்பின் அடிநாதமாக அடிப்படை உரிமைகள் இருந்தாலும், அவற்றிற்கும் சில குறைகள் உள்ளன.  சில அடிப்படை உர...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 8

Image
     நாம் அனைவரும் யார்? இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளித்துவிட்டால் நீங்கள் ஒரு வட்டத்துக்குள் சுருங்கி விட்டீர்கள் என்றே அர்த்தம். அறிவியலின் பார்வையில் நாம் மனிதர்கள் ஆனால் மனிதர்களின் பார்வையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியர், தமிழர், இந்த மதத்தவர், இந்த சாதியை சேர்ந்தவர் என வகை பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. முகப்புரை "இந்திய மக்களாகிய நாம்" என்று நம் அனைவரையும் இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வருகிறது. நாம் இந்தியர்கள் தான என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை கூறுகிறது. முதலில் ஒரு நாட்டில் வாழும் மக்களை அந்நாட்டின் குடிமக்கள் என அடையாளப்படுத்த வேண்டிய தேவை ஏன் உருவானது? ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டத்திட்டமும், அந்நாட்டு மக்களுக்கான சலுகைகளும் உண்டு. அது அந்நாட்டின் குடிமக்களுக்காக மட்டுமே வழங்கப்படும் உரிமைகள், அதை மற்றவர் அனுபவிக்க முடியாது. உதாரணமாக இந்திய அரசியலமைப்பு இந்தியர்களுக்கு என்று சில சிறப்பு உரிமைகளை வழங்குகிறது. அவை சட்டப்பிரிவு 15(பாகுபாடு இல்லாமை),  சட்டப்பிரிவு 16(சமவாய...