Posts

Showing posts from 2024

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 7

Image
7 நான்கு சம்பவங்கள்:  1) 2014ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி, தெலுங்கானா இந்தியாவின் 28வது மாநிலமாக உதயமானது.  2) 2019 சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. 3) ஜனவரி 26, 2020இல் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியும், டாமன் மற்றும் தையு என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. 4) கடைசி சம்பவம் கடந்த வருடம் நடந்த ஜி 20 மாநாட்டில் "இந்தியாவின் பிரதமர்" என்று அழைப்பதற்கு பதிலாக "பாரதத்தின் பிரதமர்" என்று அழைக்கப்பட்டது. இதெல்லாம் எப்படி நடைபெற்றது யார் அதிகாரம் கொடுத்தார்கள் போன்ற விஷயங்களை தான் இந்த அத்தியாயத்தில் பார்க்க போகிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஒன்றிலிருந்து நான்கு வரை இந்திய ஒன்றியம் மற்றும் அதன் நிலவரையறை பற்றி கூறுகிறது. சட்டப்பிரிவு 1: " இந்தியா என்னும் பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்"  இந்த சொல்லாடல் மிகவும் முக்கியம். காரணம் ஒன்றியம்(Union) என்பதற்கும் கூட்டாட்சி(Federation) என்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்திய ஒன்றியத்தில் இருந்து எந்த மாநிலங்களும் பிரிந்து செல்ல இயலாத...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் -6

Image
6 நவம்பர் 27 2024 , இந்திய உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. இந்திய அரசியலமைப்பில் உள்ள "பொதுவுடைமை(socialism)" மற்றும் "மதச்சார்பின்மை" ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டிய தேவையில்லை என்பதை உறுதி செய்தது.  "PREAMBLE" - இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, இதை "இந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை" என்று N A Palkhivala குறிப்பிடுகிறார். இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, நேரு அவர்கள் கொண்டு வந்த குறிக்கோள் தீர்மானத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த முகப்புரையில் இருக்கும் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு பின்னால் மிக பெரிய அர்த்தங்கள் உள்ளன. அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம். இறையாண்மை - Sovereign  இறையாண்மை என்ற வார்த்தையின் பொருள் "இந்திய நாடானது எந்த ஒரு நாட்டின் அதிகாரத்திற்கு கீழோ அல்லது எந்த ஒரு நாட்டையும் தன் அதிகாரத்தின் கீழோ கொண்டிருக்கவில்லை" என்பது தான். இந்திய நாடு சுதந்திரமான நாடு ,அதன் உள்நாட்டு விஷயங்களையும் வெளியுறவுகளையும் எவ்வித அழுத்தமுமின்றி சுயமாக முடிவெடுக்க முடியும்‌. அதே சமயம் இந்தியா  தன்னை காமன்வெல்த்...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 5

Image
மிக பெரிய அரசியலமைப்பின் சிறப்பம்சங்கள் எப்படி சிறியதாக  முடிந்துவிடும்..., இன்னும் சிலவற்றை இந்த பகுதியில் பார்ப்போம். மதச்சார்பற்ற நாடு இந்திய அரசியலமைப்பு இந்தியாவை ஒரு மதசார்பற்ற நாடு என்று பிரகடனப்படுத்தியுள்ளது.  "மதசார்பற்ற"  என்று சொல் 1976ல் கொண்டுவரப்பட்ட 42ஆவது சட்டத்திருத்த மூலம் முகப்புரையில் சேர்க்கப்பட்டது. அம்பேத்கர் எழுதியபோது முகப்புரையில் இந்த வார்த்தையே இல்லை. இந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதால் இந்தியா மதம் சார்ந்த நாடு என்று புரிந்துக் கொள்ள கூடாது. அரசியலமைப்பில் உள்ள பல உறுப்புகளும் சட்டங்களும் மறைமுகமாக இந்திய மதசார்பற்ற நாடு என்றே உணர்த்துகின்றன. உதாரணமாக  அடிப்படை உரிமைகள் உறுப்பு 15 - "எந்த ஒரு இந்தியருக்கும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது"   என்று கூறுகிறது. உறுப்புகள் 16, 25, 26, 27, 28, 29 இன்னும் பல. மேற்கத்திய நாடுகளின் "மதச்சார்பின்மைக்கும்" நம் நாட்டின் "மதச்சார்பின்மைக்கும்" கருத்து வேறுபாடுகள் உள்ளன, மேற்கத்திய நாட்டில் மதமானது...