Posts

Showing posts with the label Stories

சரியான நேரம்

Image
சரியான நேரம்       அந்த பீரியட் முடிந்து ஸ்டாஃப் ரூமில் வந்து அமர்ந்தாள் மீரா. முகம் வாடிப் போயிருந்தது, வெயில் ஒரு பக்கம், இந்த பசங்களுக்கு பாடம் எடுக்குறது ஒரு பக்கம். அங்கிருந்த மேசை மீது தலை சாய்த்து படுத்துவிட்டாள். ஸ்டாஃப் ரூமில் இருந்தவர்கள் அவர் அவர்கள் வகுப்பிற்கு செல்ல ஆரம்பித்தனர், வகுப்புகள் முடிந்தவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தனர். "என்ன மீரா தூங்கிட்டு இருக்க" என்று சீண்டினாள், பாக்கியம் மேடம். பாக்கியம் என்பது அவருடைய பெயர், அறிவியல் ஆசிரியை, மற்றும் கொஞ்சம் சீனியர் என்பதால் "மேடம்" பெயரோடு ஒட்டிக் கொண்டது. "சின்ன புள்ளைங்க நல்ல பிரிஸ்கா இருக்க வேணாமா ?" என்று மறுபடியும் சீண்டினாள். காரணம், விளக்கம் எல்லாம் சொல்லி அவர்களிடம் தன் நிலையை சொல்ல அவளுக்கு தோன்றவில்லை விருப்பமும் இல்லை, "ஆமாம் நான் லூசு தான்" என்று வடிவேலு பாணியில் பேச்சை முடிப்பதற்காக "ஒடம்பு சரியில்லை மேடம்" என்று சொல்லி  மறுபடியும் படுத்துக்கொண்டாள். இதற்கு மேல் எதுவும் பேசாமல் பாக்கியம் மேடம் அவர் இருக்கைக்கு சென்றுவிட்டாள். மீராவிற்கு இது தான் முதல் வேலை...

காகித அன்பு

Image
அ ந்த பிரபலம் இல்லாத பத்திரிகையில் “பேனா பக்கிரி” என்ற அடைமொழியில் எழுதிக்கொண்டு இருந்தான் மாறன். சில ஆயிரங்களில் தான் சம்பளம் என்றாலும், ஏனோ அந்த எழுத்துக்கள் அவனுக்கு ஒரு நிறைவை கொடுத்துக்கொண்டு இருந்தன. பேனா பக்கிரி எழுதிய 70% சதவீத கதைகள் நல்ல கதைகள் ரகம் தான். இவன் கதைகளால் பத்திரிகை விற்கிறதா? அல்லது பத்திரிகை விற்பதால் இவனுக்கு கதை எழுத வாய்ப்பு வருகிறதா என்பது புரியாத புதிர். “வாசகர்கள் குறைந்துகொண்டே இருக்கிறார்கள்” என்று பத்திரிகையின் ஆசிரியர் சொன்னது ஞாபகம் வந்தது. ரீல்ஸ், ஷார்ட்ஸ், டிக் டாக் என்று இன்று வேகமாக தகவல்களை மூளைக்குள் திணித்துக்கொண்டு ஒடும், இன்றைய தலைமுறைக்கு கொஞ்சமும் ஒட்டாத நிலையில் இருந்தான் மாறன். கதைகளை ஏதோ என்று எழுதுவதோ அல்லது “இன்ஸ்பிரேஷன்” என்றுக் கூறிக்கொண்டு ஒரே விஷயத்தை வேறு ஒன்றாக உருட்டி தருவதோ, அவனிடம் கிடையாது. அத்தனையும் சொந்த சரக்கு. ஆர்வமும் திறமையும் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் இயங்கும் பல லட்சம் இளைஞர்களை போலத்தான் மாறனும், "என்றாவது ஒரு நாள் தன் வாழ்க்கை மாறும், அதுவரை ஓடுவோம்" என்ற நம்பிக்கையில் ஒடிக்கொண்டு இருப்பவன்...