இந்திய அரசியலமைப்பு - குறிப்புகள் - 1



இந்த தொடரின் நோக்கமே நான் கற்ற சிலவற்றை  உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே. மிக கடினமாக இல்லாமல் எல்லோரும் இந்திய அரசியலமைப்பை பற்றி  அறிந்துகொள்ள வேண்டும் என்பது தான். இதெல்லாம் எங்களுக்கு எதற்கு என்ற கேள்வி எழலாம்?. ஒரு பரந்துபட்ட பார்வையில்  சொல்ல வேண்டும் என்றால் இந்திய குடிமக்கள்  ஆகிய நம் அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று. நம் உரிமைகளை நாம் பாதுகாத்துக்கொள்ள அரசியலமைப்பை பற்றிய அறிவு இன்றியமையாத ஒன்று. ஒரு குறுகிய பார்வையில் சொல்வதென்றால்  போட்டி தேர்வுகளுக்கு கண்டிப்பாக பயன்படும். எது எப்படியாக இருந்தாலும் உங்களுக்கு பயன்படும் என்ற ஒற்றை நோக்கம் தான் இதை எழுதுவதறக்கான உந்துதல்.  






      நம் நாட்டிற்கு அரசியலமைப்பு வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் வலியுறுத்தியவர் பொதுவுடைமைக் இயக்கத்தின் முன்னோடி M.N.Roy ஆகும். இன்று நம் அரசியலமைப்பில் இருக்கும் பெரும்பாலான சட்டங்கள்ஆங்கிலேய சட்டத்தின் நீட்சியேஅப்படி என்றால் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பங்கு என்னவென்று உங்களுக்குள் கேள்வி எழலாம்பல சட்டங்கள் இருந்தாலும் அவற்றை திருத்தி இந்திய ஜனநாயகத்தில் உள்ள அனைவருக்கும் ஏற்றவாறுஇன்று வரையில் பொருந்தி போகக்கூடிய சட்டங்களை இயற்றியது தான் அவரின் மிக பெரிய பங்கு அதனால் தான் அவரை "இந்திய அரசியலமைப்பின் தந்தை" என்று குறிப்பிடுகிறோம்.   

                    
          1660களில் ஆங்கிலயர்கள் வணிகம் செய்யும் நோக்கில் கிழக்கிந்திய கம்பெனி என்ற பெயரில் இந்தியாவிற்கு வந்தனர். வணிகத்தோடு அவர்களின் வஞ்சக சூழ்ச்சிகளையும் செய்தனர். கம்பெனியின் கிடங்குகளை பாதுகாக்க ஆயுதம் ஏந்திய ஆட்களுக்கு அனுமதி வேண்டும் என்று உள்ளூர் சிற்றரசனிடம் கோரிக்கை வைக்க ஆரம்பித்துபோக போக அந்த ஊர் அரசியலில் தலையிட்டுபோர் வந்தவுடன் போருக்கு உதவ வேண்டும் என்றால் சில நிபந்தனைகளை கூறி நிர்பந்தித்துவெற்றி பெற்றவுடன் சிற்றரசனை கைது அல்லது சூழ்ச்சி செய்து நாட்டை அபகரித்து கொண்டு தங்களின் இடமாக மாற்றினார்கள்.   இதனால்  அடுத்த நூறாண்டுகளில் இந்திய அரசியலை  தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக உருபெற்றனர்.

  
    கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகம் மோசமான நிலைமைக்கு சென்றுக் கொண்டு இருந்ததுஊழல் அதிகரித்து கம்பெனி திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டதுகம்பெனியை மீட்டெடுக்கும் பொருட்டு உருவாக்க பட்டதே ஒழுங்கு முறைச் சட்டம் 1773 (Regulating act of 1773). இந்த சட்டத்தின் மூலம் ஆங்கிலேய அரசாங்கம் முதன்முறையாக கம்பெனியின் நிர்வாகத்தை கட்டுபடுத்த முயற்சி எடுத்தது. இந்த சட்டம் ஆங்கிலேய அரசாங்கத்தின் மத்திய அமைப்பிலான ஆட்சிக்கு அடிதளமிட்டது. வங்காளத்தின் ஆளுநரை(Governor of Bengal) வங்காளத்தின் தலைமை ஆளுநராக(Governor general of Bengal) இச்சட்டம் மாற்றியதுஇதன் பொருள் என்னவென்றால் வங்காள மாகாணம் சொல்வதை தான் இனி மற்ற மாகாணங்கள் கேட்க வேண்டும் இச்சட்டத்திற்கு முன்பு ஒவ்வொரு மாகாணமும் சுதந்திரமானவைஎல்லா மாகாணத்தின் ஆளுநர்களும் ஆங்கிலேய அரசுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் வார்ன் ஹேஸ்டிங்க், நிர்வாகத்தில் அவருக்கு உதவிட நான்கு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கல்கத்தாவில் முதல் உச்சநீதிமன்றம் அமைக்க இச்சட்டம் உதவியது. கம்பெனியின் ஊழியர்கள் கையூட்டு அல்லது பரிசுகள் பெறுவதற்கும் தனிப்பட்ட வர்த்தகத்தில் ஈடுப்படவும் தடை விதிக்கப்பட்டது.
 
warren hastings

 கம்பெனியின் நிர்வாகத்தை ஆங்கிலேய அரசிடம் தெரியப்படுத்த இயக்குனர்கள் குழுவிற்கு (court of directors) அறிவுறுத்தப்பட்டது.  ஒழுங்கு முறைச் சட்டத்தில் ஏற்ப்பட்ட குறைகளை தீர்ககும் வகையில் கொண்டு வந்ததே பிட் இந்திய சட்டம் 1784 (Pitt's India act of 1784). இந்த சட்டம் கம்பெனியின் நிர்வாகத்தின் மீது ஆங்கிலேய அரசுக்கு முழு அதிகாரம் வழங்கியது. கம்பெனியின் நிர்வாகத்தை அரசியல் மற்றும் வணிகம் என்று இரண்டாக பிரித்தது. இயக்குனர்கள் குழு வணிக நடவடிக்கைகளையும் புதிய அமைப்பான கட்டுபாட்டு வாரியம் (Board of control)  அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கட்டுபாட்டு வாரியத்திற்கு கம்பெனியின் மற்ற நடவடிக்கைகளையும் கண்காணித்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத்தில் முக்கியமான ஒன்று என்னவென்றால் முதன்முறையாக "ஆங்கிலேய அரசாங்கம் கம்பெனியின் நிலப்பரப்பு மற்றும் உடைமைகளை தங்களுடையது என்று அறிவித்தது.  
 
           
William bentick
அடுத்தப்படியாக பட்டயச் சட்டம் 1833(Charter act of 1833) மத்தியில் அதிகார குவிப்பிற்கான கடைசி நடவடிக்கை. இந்த சட்டம் மூலம் வங்காளத்தின் தலைமை ஆளுநர் பதவியை இந்தியாவின் தலைமை ஆளுநர் என்று மாற்றினர். வில்லியம் பென்டிக் தான் இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர். மெட்ராஸ் மற்றும் பாம்பே மாகாணங்களின் சட்டம் இயற்றும் அதிகாரம் முழுவதுமாக பறிக்கப்பட்டு இந்தியாவின் தலைமை ஆளுநர் வசம் ஒப்படைக்கப்பட்டது அவரே இனி இந்தியா முழுவதும் சட்டம் இயற்றுவார். இந்த சட்டம் கிழக்கிந்திய கம்பெனியின் வணிக நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்து அதை ஆங்கிலேய அரசின் பெயரில் இந்தியாவை முழுவதுமாக நிர்வகிக்கும் ஒர் அமைப்பாக மாற்றியது. இந்த சட்டம் ஆங்கிலேய அரசில் பணியாற்ற குடிமை பணி தேர்வுகளை அறிமுகப்படுத்தியது இந்தியர்களும் பங்கு பெறாலாம் என்று அறிவிக்கபட்டது. ஆனால் ஆங்கிலேயர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பவேஇத்திட்டம் கைவிடப்பட்டது.


பட்டயச் சட்டம் 1853 (Charter act of 1853) பட்டய சட்டங்களின் வரிசையில் இயற்றப்பட்ட கடைசி சட்டம். இச்சட்டம் அரசியலமைப்பு இயற்றுவதற்கான ஒரு மைல்கல் என குறிப்பிடலாம். இச்சட்டம் மூலம் தலைமை ஆளுநரின் நிர்வாகம் மற்றும் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன. சட்டம் இயற்றுவதற்காக கூடுதலாக ஆறு பேர் கொண்ட இந்திய சட்டம் இயற்றும் குழு (Indian legislative council) உருவாக்கப்பட்டது. இக்குழு ஆங்கிலேய நாடாளுமன்றம் பின்பற்றும் விதிமுறைகளை பின்பற்றி சட்டங்களை இயற்றும்இது ஒரு குட்டி நாடாளுமன்றம் போல் செயல்படும். குடிமை பணி தேர்வுகளில் இந்தியர்களும் பங்கேற்க சட்டம் வழிவகுத்தது. கம்பெனி ஆங்கிலேய அரசின் பெயரில் இந்தியாவை ஆட்சி செய்வதற்கான காலம் நீட்டிக்கபட்டதுஆனால் காலவரையறை குறிப்பிடப்படவில்லை இதன் மூலம் கம்பெனியின் ஆட்சி எப்போது வேண்டுமானாலும் முடிவுக்கு வரலாம் என்ற நிலை உருவானது. இச்சட்டம் மூலம் உள்ளுர் பிரதிநிதித்துவம் கொண்டுவரப்பட்டது. இந்திய சட்டம் இயற்றும் குழுவில் ஆறில் நான்கு பேர் மற்ற மாகாணங்களில் இருந்து நியமிக்கபட்டனர்.
இப்படியான சூழல் போய் கொண்டிருக்க இன்னும் நான்கு வருடங்களில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழும்....அது என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.....
          

குறிப்புகள் தொடரும் ............. 

Comments

Popular posts from this blog

சரியான நேரம்

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 9

காகித அன்பு