இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 7
7 நான்கு சம்பவங்கள்: 1) 2014ஆம் ஆண்டு ஜூன் இரண்டாம் தேதி, தெலுங்கானா இந்தியாவின் 28வது மாநிலமாக உதயமானது. 2) 2019 சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. 3) ஜனவரி 26, 2020இல் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியும், டாமன் மற்றும் தையு என்ற இரண்டு யூனியன் பிரதேசங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. 4) கடைசி சம்பவம் கடந்த வருடம் நடந்த ஜி 20 மாநாட்டில் "இந்தியாவின் பிரதமர்" என்று அழைப்பதற்கு பதிலாக "பாரதத்தின் பிரதமர்" என்று அழைக்கப்பட்டது. இதெல்லாம் எப்படி நடைபெற்றது யார் அதிகாரம் கொடுத்தார்கள் போன்ற விஷயங்களை தான் இந்த அத்தியாயத்தில் பார்க்க போகிறோம். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு ஒன்றிலிருந்து நான்கு வரை இந்திய ஒன்றியம் மற்றும் அதன் நிலவரையறை பற்றி கூறுகிறது. சட்டப்பிரிவு 1: " இந்தியா என்னும் பாரதம் மாநிலங்களின் ஒன்றியம்" இந்த சொல்லாடல் மிகவும் முக்கியம். காரணம் ஒன்றியம்(Union) என்பதற்கும் கூட்டாட்சி(Federation) என்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இந்திய ஒன்றியத்தில் இருந்து எந்த மாநிலங்களும் பிரிந்து செல்ல இயலாத...