Posts

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 4

Image
இந்திய அரசியலமைப்புக்கு என்று தனி சிறப்பம்சம் உள்ளது. பல நாடுகளின் அரசியலமைப்புகளை தழுவி எழுதப்பட்டதே இந்திய அரசியலமைப்பு , ஏதோ நகல் எடுத்தது போல் அல்லாமல் இந்த இந்திய துணைக்கண்டத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தி போகின்ற வழியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு பல சட்ட திருத்தங்களை சந்தித்தாலும் இன்றளவும் , இந்த மாற்றங்கள் அடைந்த சமூகத்திற்கு ஏற்ப இருக்கிறது. இதற்கு காரணம் இந்திய அரசியலமைப்பின்   " அடிப்படை கட்டமைப்பு" .   இந்த அடிப்படை கட்டமைப்பு மாறாமல் இருப்பதால் தான் இன்றளவும் இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த அடிப்படை கட்டமைப்பு என்பது என்வென்று இனி வரும் காலங்களில் பார்ப்போம் , இந்த தொடர் முடியும் பொழுது கண்டிப்பாக  உங்களுக்கு  அது  தானாகவே புரிந்துவிடும். நிறைவான நிறைகள் என்னை பொறுத்தவரை இந்த அண்டத்தில் புனிதம் என்ற ஒன்றோ அல்லது முழுவதுமாக நல்லவை என்ற ஒன்றோ கிடையாது. எல்லா உயிர்களிடத்தும் சரி , எல்லா பொருளிலும் சரி நல்லது கெட்டது , பயனுள்ளது பயனற்றது என்று குணங்கள் உண்டு , இவற்றின் வீகிதம் தான் அந்த பொர...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 3

Image
இந்திய அரசியல் நிர்ணய சபைக்கான குரலானது M.N. ராயிடம் இருந்து தொடங்கியது. இந்தியாவை இந்திய மக்கள் தான் ஆள வேண்டும் , அதற்காக தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசாங்கம் வேண்டும் என்ற கோரிக்கை படிப்படியாக வளர்ந்து , 1938 ல்   இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் நேரு " இந்தியாவை இந்தியர்கள் ஆள ஒரு அரசியலமைப்பு தேவை" என்ற‌ தீர்மானத்தை நிறைவேற்றி ஆங்கிலேய அரசுக்கு தெரியப்படுத்தினார். இந்த கோரிக்கை 1940 ஆம் ஆண்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது , இதை "ஆகஸ்ட் சலுகை" என்பார்கள். இந்தியாவிற்கான அரசியலமைப்பை உருவாக்க "கிரிப்ஸ் திட்டம்" வந்தது. தனிநாடு மற்றும் தனி அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் லீகால் முன்வைக்கப்பட்டது , இதனால் கிரிப்ஸ் திட்டத்தை நிராகரித்தார்கள். முஸ்லிம் லீக்கின் சில கோரிக்கைகளை நிறைவேற்றி "கேபினட் திட்டம்" உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் இந்திய அரசியல் நிர்ணய சபை உருவாக்கப்பட்டு இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி தொடங்கியது. இந்திய அரசியல் நிர்ணய சபைக்கு உறுப்பினர்கள் மறைமுக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எ...

இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் -2

Image
     கடந்த பகுதியில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்து என்று கூறினேன் அல்லவா!. அது தான் "பெரும் கலகம்" அல்லது சிப்பாய் கலகம் என்று அழைக்கப்படும். இதை இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று சாவர்க்கர் குறிப்பிடுவார். ஆனால் இது இந்தியாவின் முதல் சுதந்திர போர் என்று சொல்ல முடியாது, காரணம் இந்த கலகம் மக்களின் மதம், பொருளாதாரம், மற்றும் சில தனிப்பட்ட காரணங்களால் உருவான கலகம், இதை வழிநடத்தியவர்கள் அந்த அந்த ஊரை சார்ந்த அரசர்களும் குறுநில மன்னர்களும் தான். ஒரு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு மற்றொர் மாகாண மக்களை பற்றிய கவலை கிடையாது. மக்கள் சாதியகவும், மதமாகவும், இனமாகவும் பிரிந்து இருந்தார்கள். தீண்டாமையும் மூட பழக்க வழக்கங்கள் மலிந்து காணப்பட்டன. இந்த பிரிவினைகளால் தான் அன்றைய கலகம் தோற்று போகவும் காரணமாய் இருந்தது. இப்போது நம் விஷயத்திற்கு வருவோம். இந்த சிப்பாய் கலகம் தான், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்தியா நேரடியாக ஆங்கிலேய அரசு குடும்பத்தின் ஆட்சிக்கு கீழ் சென்றது. கேனிங்க் இந்திய அரசு சட்டம் 1858      இந்த சட்டம் தலைமை ஆளுநர் என்ற பதவ...

இந்திய அரசியலமைப்பு - குறிப்புகள் - 1

Image
இந்த தொடரின் நோக்கமே நான் கற்ற சிலவற்றை    உங்களுடன் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்பதே. மிக கடினமாக இல்லாமல் எல்லோரும் இந்திய அரசியலமைப்பை பற்றி    அறிந்துகொள்ள வேண்டும் என்பது தான். இதெல்லாம் எங்களுக்கு எதற்கு என்ற கேள்வி எழலாம் ?.  ஒரு பரந்துபட்ட பார்வையில்    சொல்ல வேண்டும் என்றால் இந்திய குடிமக்கள்    ஆகிய நம் அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று. நம் உரிமைகளை நாம் பாதுகாத்துக்கொள்ள அரசியலமைப்பை பற்றிய அறிவு இன்றியமையாத ஒன்று. ஒரு குறுகிய பார்வையில் சொல்வதென்றால்  போட்டி தேர்வுகளுக்கு கண்டிப்பாக பயன்படும். எது எப்படியாக இருந்தாலும் உங்களுக்கு பயன்படும் என்ற ஒற்றை நோக்கம் தான் இதை எழுதுவதறக்கான உந்துதல்.          நம் நாட்டிற்கு அரசியலமைப்பு வேண்டும் என்ற கருத்தை முதன்முதலில் வலியுறுத்தியவர் பொதுவுடைமைக் இயக்கத்தின் முன்னோடி   M.N.Roy   ஆகும்.   இன்று நம் அரசியலமைப்பில் இருக்கும் பெரும்பாலான சட்டங்கள் ,  ஆங்கிலேய சட்டத்தின் நீட்சியே ,  அப்படி என்றால்   சட்ட ம...