இந்திய அரசியலமைப்பு குறிப்புகள் - 8
நாம் அனைவரும் யார்? இந்த கேள்விக்கு நீங்கள் பதிலளித்துவிட்டால் நீங்கள் ஒரு வட்டத்துக்குள் சுருங்கி விட்டீர்கள் என்றே அர்த்தம். அறிவியலின் பார்வையில் நாம் மனிதர்கள் ஆனால் மனிதர்களின் பார்வையில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் இருக்கத்தான் செய்கின்றன. இந்தியர், தமிழர், இந்த மதத்தவர், இந்த சாதியை சேர்ந்தவர் என வகை பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. முகப்புரை "இந்திய மக்களாகிய நாம்" என்று நம் அனைவரையும் இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்திற்குள் கொண்டு வருகிறது. நாம் இந்தியர்கள் தான என்பதை இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 5 முதல் 11 வரை கூறுகிறது. முதலில் ஒரு நாட்டில் வாழும் மக்களை அந்நாட்டின் குடிமக்கள் என அடையாளப்படுத்த வேண்டிய தேவை ஏன் உருவானது? ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு சட்டத்திட்டமும், அந்நாட்டு மக்களுக்கான சலுகைகளும் உண்டு. அது அந்நாட்டின் குடிமக்களுக்காக மட்டுமே வழங்கப்படும் உரிமைகள், அதை மற்றவர் அனுபவிக்க முடியாது. உதாரணமாக இந்திய அரசியலமைப்பு இந்தியர்களுக்கு என்று சில சிறப்பு உரிமைகளை வழங்குகிறது. அவை சட்டப்பிரிவு 15(பாகுபாடு இல்லாமை), சட்டப்பிரிவு 16(சமவாய...